Wednesday 19 October 2011

பிரகாஷ் ராஜ் படத்தில் தோனி?


பிரகாஷ் ராஜின் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை, என்பதை பிரகாஷ் ராஜ் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் மனநிலையை மையப்படுத்தி 'தோனி' என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது: தேர்வுக்காக குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றனர். பெற்றோரும் அவர்களை அதிக மதிப்பெண் பெற நிர்ப்பந்திக்கின்றனர். குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டுவரும் கல்விமுறை நம்மிடம் இல்லை. குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது. சமூகத்துக்கு இப்படம் சில கருத்துக்களை சொல்லும். ஆகாஷ், ராதிகாஆப்தே, தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர். கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். பிரபுதேவா எனக்கு நெருங்கிய நண்பர். அவர் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு பாடல் காட்சியில் வருகிறார். இந்த வருடம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார். இதனிடையில் படத்தில் கவுரவ தோற்றத்தில் இந்திய அணியின் கேப்படன் தோனி நடிக்க போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன

No comments:

Post a Comment