Wednesday, 16 November 2011

பாலிவுட்டுக்குப் போகும் அப்படிப்போடு பாடல். ஆட்டம் போடும் மல்லிகா ஷெராவத்

சிம்பு நடிக்கும் 'ஒஸ்தி' படத்தில் வில்லனாக நடித்தவர் சோனு தூத். வில்லனாக மட்டுமல்லாமல் 'ஒஸ்தி' படத்தில் இடம்பெறும் 'கலசலா..' என்ற பாடலில் மல்லிகா ஷெராவத்துடன் இணைந்து ஆடி இருக்கிறார்.

இந்தியில் முதன்முறையாக சோனு தூத் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார். படத்தின் பெயர் ' LUCKY UNLUCKY '. இப்படத்திலும் அவருடன் மல்லிகா ஷெராவத் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  'கில்லி'  படத்தில் இடம்பெற்ற 'அப்படிப் போடு போடு..'  பாடலை தனது தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'LUCKY UNLUCKY' படத்திற்காக வாங்கி இருக்கிறார். சோனு தூத்.

இது குறித்து சோனு தூத் " அப்படிப் போடு பாடலின் உரிமையை வாங்கி இருக்கிறேன். இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்தி படத்திற்கு ஏற்ப அப்பாடலின் இசையை மாற்றி வருகிறார்.


'அப்படிப் போடு' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் தயாரிக்கும் படத்திற்கு இப்பாடல் SOUTH INDIAN FLAVOUR சேர்க்கும் " என்று கூறி இருக்கிறார்.

' கலசலா ' பாடலை தொடர்ந்து ' அப்படிப் போடு ' பாடலுக்கும் மல்லிகா ஷெராவத்துடன் இணைத்து ஆட இருக்கிறார் சோனு தூத்.

No comments:

Post a Comment