சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ஏழாம் அறிவு'. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தயாரித்து இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒருவரை சீனாவில் கோவில் கட்டி சாமியாக கும்பிட்டு வருகிறார்கள். பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவரது கதையையும், தற்போது நடைபெறும் கதையையும் இணைத்து கமர்ஷியல் கலந்த படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் முதலிலேயே படத்தினை தீபாவளி வெளியீடு என்று தீர்மானித்து தியேட்டர்களை புக்கிங் செய்ய ஆரம்பித்து விட்டார். தீபாவளிக்கு முதலில் உறுதி செய்யப்பட்ட படம் என்பதால் அதிக தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளா புறநகர்களில் மட்டும் 47 தியேட்டர்களில் வெளிவர இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.

விஜய், ஜெனிலியா,ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். தெலுங்கில் வெளியான 'ஆசாத்' படத்தின் தழுவல் தான் 'வேலாயுதம்' என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வெளியீட்டு தேதிகளில் அறிவிக்கப்பட்டு இறுதியில் தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. விஜய் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங், ஆஸ்கார் ரவிச்சந்திரனின் விளம்பரப்படுத்துதல் ஆகிய இரண்டையும் நம்பி இப்படம் வர இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் ஊர்களில் மட்டும் 38 தியேட்டர்களில் வெளிவர இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கும் U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.

'ஏழாம் அறிவு' படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் "தீபாவளி தினத்தன்று முதல் காட்சி கண்டிப்பாக 'வேலாயுதம்' படத்தை பார்ப்பேன், ஒரு விஜய் ரசிகனாக.. " என்று கூறி இருந்தாலும் அவரது தயாரிப்பான 'ஏழாம் அறிவு' படத்திற்கு தனது டிவிட்டர் இணையத்தில் படத்தினை முழுவதும் விளம்பரப்படுத்தி வருகிறார்.
ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறப்போவது விஜய் படமா, சூர்யா படமா என்பது தீபாவளி முடிந்தபின் தெரியும். இதற்காக சினிமா ஆர்வலர்கள் பலரும் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment