படங்களை முடித்து கொடுத்து மாத கணக்காகியும் திருமண தேதியை பிரபு தேவா முடிவு செய்யாததால் காத்திருக்கிறார் நயன்தாரா.
பிரபு தேவா, நயன்தாரா காதல் ஜோடியின் திருமணத்துக்கு, பிரபு தேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சட்டப்படி இருவரும் விவாகரத்து பெற்றனர். இதற்கிடையில், ‘ஸ்ரீ ராம ராஜ்யம்Õ படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஓராண்டு நடந்த அதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அத்துடன் புதிய படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
பிரபு தேவாவும் பட இயக்கத்தில் பிஸியாக இருந்ததால் திருமணம் பற்றி மவுனம் காத்தார் நயன்தாரா. அக்டோபர் முதல் வாரத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை பிரபுதேவாவிடம் இருந்து திருமண தேதி பற்றி முடிவு எதுவும் தெரியாததால் குழப்பத்தில் இருக்கிறார் நயன்தாரா. இதற்கிடையில் பிரபுதேவா தனது குழந்தைகளுடன் நெருக்கம் காட்டி வருகிறார். சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் ஷூட்டிங் செல்வதாக பிரபுதேவா கூறியபோது, தானும் உடன் வருவதாக நயன்தாரா தெரிவித்தார்.
ஆனால், அவரை மும்பையிலேயே தங்கி இருக்க சொல்லிவிட்டு பிரபுதேவா தனது குழந்தைகளுடன் வெளிநாடு சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து சென்னை திரும்பிய பிரபுதேவா, விமான நிலையத்திலேயே குழந்தைகளை நண்பர்கள் மூலம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அடுத்த விமானத்திலேயே நயன்தாராவை காண மும்பை பறந்தார்.
இதுபற்றி நயன்தாராவுக்கு தெரிய வந்தும், அதை பெரிதுபடுத்தாமல் திருமண தேதி பற்றி தெரிவிக்குமாறு பிரபுதேவாவிடம் வற்புறுத்தி உள்ளார். திருமண தேதி முடிவாகாத நிலையில் புதிய படங்களில் நடிப்பது பற்றியும் நயன்தாரா யோசித்து வருகிறார். சமீபத்தில் மலையாள இதழ் ஒன்றுக்கு போட்டோ ஷூட் நடத்த ஒப்புதல் அளித்ததுடன் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவது பற்றி அறிவிக்க இருந்தார். பின்னர் அந்த முடிவை கைவிட்டார். திருமணத்தை பிரபுதேவா தள்ளி போடுவது ஏன் என்ற குழப்பத்தில் நயன்தாரா இருக்கிறார்
No comments:
Post a Comment