Monday, 31 October 2011

ஏழாம் அறிவில் வரும் போதிதர்மர் தமிழரே கிடையாது. கிளம்பும் புது பூதம்.!!

காஞ்சிபுரத்தில் இருந்து போதி தர்மர், சீனாவுக்கு சென்று தற்பாதுகாப்பு கலைகளை பரப்பினார் என்று ஏழாம் அறிவு சினிமா படம் வெளி வந்துள்ளது. ஆனால் போதி தர்மர் தமிழரே கிடையாது என்று கண்டன போஸ்டர்களை சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர் நாகர் சேனை அமைப்பை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து அந்த அமைப்பினர் செய்தி தொடர்பாளர் பரஞ்சோதி பாண்டியனிடம் பேசியபோது, ‘7ம் அறிவு படம் வெளியானதும் ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடப்பான் என்று அந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் பேட்டியளித்துள்ளார். ஆனால் போதி தர்மர் தமிழனே கிடையாது.
அவரை காஞ்சிபுரத்தை சேர்ந்த பல்லவ இளவரசர் என்று படத்தில் கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் போதி தர்மர் களப்பிரர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர். களப்பிரர் கர்நாடகா மாநிலம் பெல்லாரி மற்றம் ஆந்திராவில் கடப்பா ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்.
முருகதாஸ் சொன்னது போல், போதி தர்மர் பல்லவ பரம்பரையாக இருந்தாலும், பல்லவரும் தமிழர் கிடையாது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சிம்ம விஷ்னு என்பவர் தலைமையில் பல்லவர்கள் வந்தனர். இவர்கள் களப்பிரர் ஆட்சிக்கு கீழ் சிற்றரசர்களாகவும்,
தளபதியாகும் இருந்தனர். பின்னர் சிவ கந்த வர்மன், கந்த வர்மன் 1, 2,3, என்றும் ஆட்சி செய்தனர். இதில் மகேந்திர வர்மன் மகாபலிபுரத்தை உருவாக்கினான். அவனுக்கு பின்னால் வந்த நரசிம்ம வர்மன் தமிழகம் முழுவதும் நாடுகளை பிடித்து ஆட்சி செய்துள்ளான்.
எனவே போதி தர்மன் என்பவர் பல்லவராக சொன்னாலும், அவரும் தமிழர் கிடையாது.
போதி தர்மரை சீனாவில் 27வது புத்தராக வணங்கப்படுபவர். நோபாளத்தில் பிறந்து பீகாரில் வாழ்ந்த புத்தரை பீகார்காரன் என்று குறுகிய வட்டத்துக்கு கொண்டு வருவதை ஏற்பார்களா?
அதுபோல போதி தர்மர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதற்காக அவரை தமிழர் என்று சொல்ல முடியாது. களப்பிரர் காலம் 250 முதல் 600 வரையாகும். களப்பிரர் காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் இருண்ட காலம் என்கின்றனர்.
525ம் ஆண்டு சீனாவை நோக்கி போதி தர்மர் சென்றார். அந்த காலக்கட்டத்தில் களப்பிரர் ஆட்சி வீழ்ச்சியடைய தொடங்கி விட்டது. இதற்கு காரணம், அசோகரின் கொள்ளு பேரனை கொலை செய்து புஸ்யமித்திரன் என்ற தளபதி ஆட்சியை பிடித்தான். இவன் வடமாநிலங்களில், பவுத்தர்களின் தலையை கொண்டு வந்தார் 10 ஆயிரம் தங்ககாசுகள் பரிசாக வழங்கினான்.
இதனால் பவுளத்தர்கள், சமணர்கள் என்று பலர் தென்பகுதிக்கு ஓடி வந்தனர். 6ம் நுõற்றாண்டில் சைவ மத எழுச்சி ஏற்பட்டது. இதில், ‘மதுரையில் 9 ஆயிரம் பவுத்தர்கள், திருநெல்வேலியில் 16 ஆயிரம் பவுத்தர்கள், திருவத்திபுரம் (செய்யாறு) 15 ஆயிரம்பவுத்தர்கள் கழு மரம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.
பவுத்தம், ஜைனர்கள் தமிழகத்துக்கு வந்த பின்னரே, சாதி பாகுபாடு ஏற்பட்டது. அதுவரை சேரி என்ற பகுதியே கிடையாது. தலித்துக்கள் எல்லாரும் பவுத்த மதத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பவுத்தர்களை சைவர்கள் கொலை செய்யும்போது, அமைதியாக இருந்து விட்டனர். இவர்களை ஒதுக்கி, தீண்டதகாதவர் என்றாக்கி விட்டனர்.
பவுத்தம் மதம் மூலம் தான் பள்ளி வந்தது. பள்ளிக்கு செல்பவன் பள்ளன் ஆனான். பவுத்த மத பிரசாரத்தை பறைசாற்றியவன் பறையன் ஆனான். சக்கிளியர் என்கிறார்களே, அவர்கள் எல்லாரும் சாக்கியலிச்சாவியர் என்ற புத்தர் பரம்பரையாவர். இந்த புத்தரின் மரபணு இந்த மக்களின் உடலில் இன்றும் இருப்பதால்தான், மலை போன்று மலம் கிடந்தாலும் அருவருப்பு இல்லாமல் அதை சுத்தம் ö சய்கின்றனர். இவர்களது மரபணுக்களை ஆய்வுச் செய்தால், உண்மை தெரியும்.
இதற்கிடையில் களப்பிரர் ஆட்சி வீழ்ச்சியடைய தொடங்கியபோது, 525ம் ஆண்டு சீனா நோக்கி போதி தர்மர் சென்றார். இவர் மட்டுமல்ல தென்காசியில் இருந்து வஞ்சர போதியும் சீனா சென்றார். இவர் மந்திராயம், தந்திராயத்தை அங்கு கற்றுக் கொடுத்தார். காஞ்சிபுரத்தில் இருந்து தர்மபாலர் என்பவர் நாகலாந்தா பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் முதல்வராக பணியாற்றியுள்ளார். இவர்தான் யுவான்சூவானை சந்தித்து பேசியவர்.

போதி தர்மர் யார் என்று தெரிய வேண்டும் என்றால், மயிலை சினி வேங்கடசாமி எழுதிய பவுத்தமும் தமிழரும், களப்பிரர் காலத்தில் தமிழகம் என்ற புத்தகத்தை படித்தாலே தெரிந்து விடும்.
இப்படி வரலாறு இருக்க, போதி தர்மர் தமிழர் என்று சித்தரித்து படம் எடுத்து இருப்பது, பணத்துக்காகத்தான். இவர்கள் வரலாறு தெரியாமல் இப்படி திரித்து கூறுவதை தவறு. தமிழர்களின் உணர்ச்சியை துõண்டி விட்டு, லாபம் சப்பாதிக்கப் பார்க்கின்றனர்.
இப்படி மூச்சு விடாமல் சொல்லி முடித்தார் பரஞ்சோதி பாண்டியன்.
இந்த வரலாற்று கண்டனம் தெரிவித்துள்ள பரஞசோதி பாண்டியனின் குற்றச்சாட்டு குறித்து முருகதாசை தொடர்புக் கொண்டபோது, அவரை பிடிக்க முடியவில்லை. எது எப்படியோ போதி தர்மர் தமிழர்தான் என்பது வரலாற்று சான்றுடன் விளக்குவாரா முருகதாஸ்? என்பதுதான் எல்லாருடைய கேள்வியாக இருக்கும்.
போதி தர்மர் யார்... ? எல்லாருயை 7வது அறிவும் வேலை செய்தால்தான் தெரியும்.
த மிழன் என்ற வரலாற்று உண்மைக்கு கூட எதிர்ப்பா... ? வேதனையாக இருக்கிறது அல்லவா ...? வரலாற்று ஆய்வை மேற்கொண்டு நிருப்பிக்க வேண்டும் தமிழ் தோழா... !

No comments:

Post a Comment