விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் ஷூட்டிங் வரும் 23ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் விஜய் ஜோடியாக நடிக்க, பிரபல மாடல் ஏஞ்சலா, ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருந்தார். விஜய்யுடன் போட்டோ ஷூட்டும் எடுக்கப்பட்டது. கால்ஷீட் பிரச்னை காரணமாக, அவர் நடிக்கவில்லை. இதையடுத்து இந்தி நடிகை சோனம் கபூர் நடிப்பார் எனக் கூறப்பட்டது. இப்போது, அவரும் நடிக்கவில்லை. காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியிருக்கிறார் என பட யூனிட் தெரிவித்தது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
No comments:
Post a Comment